தோஷ பரிகாரங்கள்

வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் எளிய பரிகாரங்கள்

Published On 2022-06-20 06:52 GMT   |   Update On 2022-06-20 06:52 GMT
  • பிரத்தியங்கிரா தேவியை வழிபட வழக்கிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும்.
  • எறும்பு புற்றுக்கு சர்க்கரை இட்டு வர பொருளாதார பிரச்சனைகள் நீங்கும்.

கஷ்டம் விலக...

மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடமின்றி மிகுந்த வறுமை நிலையில் உள்ளவர்கள் நொய் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரை இட்டு வர பொருளாதார பிரச்சனைகள் நீங்கும்.

மாதுர் தோஷம்

பிறந்தது முதல் தாயை பிரிந்து வாழும் பிள்ளைகள், தாயிடம் மிகுதியாக கருத்து வேறுபாடு இருப்பவர்கள், தாய் வழி முன்னோர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பவர்களுக்கு மாதுர் தோஷம் மிகுதியாக இருக்கும். இவர்கள் பௌர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதில் இருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி தானம் தந்து ஆசி பெற மாதூர் தோஷம் நிவர்த்தியாகும்.

கண்திருஷ்டி போக்க..

கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில் லஷ்மி நரசிம்மரை வழிபட நல்ல மாற்றம் தெரியும். எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் வீட்டுபூஜை அறையில் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.

வழக்கில் திருப்பம்

பல தலை முறையாக தொடரும் வழக்கினால் அவதிப்படுபவர்கள் வியாழக்கிழமை மதியம் 1.30 முதல் 3 மணி வரையான ராகு வேளையில் பிரத்தியங்கிரா தேவியை வழிபட வழக்கிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும்.

நோய் குணமாக..

அடிக்கடி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள், நோய்க்காக கடன்படுபவர்கள் சனிக்கிழமை குளத்து மீனிற்கு பொரி போட்டு வர விரயம் குறையும். நோய் தீரும்.

திருமண வாழ்வு

பலவருடங்களாக திருமணத்தடையை சந்திப்பவர்கள், தீர்க்க முடியாத விவாகரத்து வழக்கால் அவதிப்படுபவர்கள், திருமண வாழ்வில் அதிக சிரமங்களை சந்திப்பவர்கள், வாழ்க்கை துணையால் பயனில்லாதவர்கள் ஸ்ரீ வாராஹி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வர அனைத்து சுபங்களும் தேடி வரும்.மங்களம் உண்டாகும்.

குலதெய்வம்

பூர்வீகம் தெரியாதவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6 - 7 மணிக்குள் நெய்தீபம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபத்தை குலதெய்வமாக பாவித்து வேண்டிய வரம் கேட்க குலதெய்வ அருள் கிடைக்கும். பூர்வீகம் பற்றிய தகவல் கிடைக்கும்.

Tags:    

Similar News