முன்னோட்டம்
லாக் படத்தின் போஸ்டர்

லாக்

Published On 2022-03-28 23:08 IST   |   Update On 2022-03-28 23:08:00 IST
அட்டு படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த பிரமாண்ட படைப்பான 'லாக்' படத்தின் முன்னோட்டம்.
ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான சைக்கோ திரில்லராக உருவாகியுள்ள படம் 'லாக்'. இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா. பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், RPG ராயல் பினோபென் குழு, சக்திவேல் பிக்சர்ஸ், ஆகிய நிறுவனங்கள் இணைந்து ' லாக்' திரைப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார்கள்.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள் வாழ்க்கையாக வாழ்கிறார்கள். சிலருக்கு அந்தக் கனவுகள் பலிக்கின்றன. சிலருக்குப் பாதிதான் நிறைவேறுகின்றன. சிலருக்குக் கனவுகள் தொடக்கத்திலேயே கருகிப் போய் விடுகின்றன.

இந்த சமுதாயத்தில் நாம் பழகும் மனிதர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். ஏனெனில் இந்த உலகில் நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
இல்லாவிட்டால் அதற்குண்டான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதுவே 'லாக் ' படத்தின் கரு.

இப்படத்தில் நாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்க, இரண்டாவது நாயகியாக ஹரிணி நடிக்கிறார். இவர்கள் தவிர நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  

இப்படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா ஏற்கெனவே 'அட்டு' என்ற படத்தை இயக்கி, அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர். ஒளிப்பதிவு - நந்தா ,இசை -விக்ரம் செல்வா, எடிட்டிங் - மகேந்திரன் கணேசன் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.

Similar News

13

சீதா ராமம்

மைக்கேல்

விட்னஸ்

கள்ளபார்ட்