முன்னோட்டம்
போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கும் கஜானா படத்தின் முன்னோட்டம்.
போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் கஜானா. இப்படத்தை தயாரிப்பதோடு, படத்தின் கதையும் அவரே எழுதியுள்ளார். ஜோதிகா நடித்த ’ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம் ராஜ் திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குனர் யாசின் இயக்குகிறார்.
இயக்குனர் வேலுபிரபாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயத்தையும், அந்த கஜனாவை காப்பாற்றும் பேய்களின் அட்டகாசங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் காமெடியோடு சொல்லப்பட்டிருக்கும் இப்படம் பெண்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாக கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் ‘கஜானா’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.