கிசுகிசு
கிசுகிசு

வாய்ப்புகள் கிடைத்தும் வருத்தப்படும் நடிகை

Update: 2022-04-23 15:35 GMT
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்த நடிகை, பட வாய்ப்புகள் கிடைத்தும் வருத்தப்பட்டு வருகிறாராம்.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். இவர் கைவசம் தற்போது ஓரிரு படங்கள் இருக்கிறதாம். கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர், அடுத்ததாக நடிக்க இருக்கும் படங்களுக்கு ஒரு கோடி உயர்த்தி கேட்கிறாராம்.

நடிகையின் சம்பளத்தை கேட்ட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், நடிகையை ஒப்பந்தம் செய்ய கால தாமதம் செய்கிறார்களாம். இதனால் நடிகை வருத்தப்பட்டு வருகிறாராம். மேலும் சம்பளத்தால் பட வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்ற பயமும் நடிகைக்கு இருக்கிறதாம். இதனால் என்ன செய்துவதென்று தெரியாமல் புலம்பி வருகிறாராம்.
Tags:    

Similar News