கிசுகிசு
கிசுகிசு

தேடி வந்த பட வாய்ப்பை நிராகரித்த நடிகை

Update: 2022-04-19 18:07 GMT
பிரபல நடிகையாக இருப்பவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதால், அதை நடிக்க மாட்டேன் என்று கூறி மறுத்து வருகிறாராம்.
தமிழில் நடித்து பிரபலமான நடிகைகள், தெலுங்கு சினிமாவில் நுழைந்து அடுத்ததாக பாலிவுட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்து வருகிறார்களாம். ஆனால், அந்த வாய்ப்பு பல நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை. தற்போது ஒரு நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தும் பட வாய்ப்பை மறுத்து இருக்கிறாராம்.

மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நடிகை தற்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறாராம். இந்தநிலையில் நடிகைக்கு பிரபல நிறுவனம் ஒன்றிடமிருந்து இந்தியில் இரண்டு படங்களில் நடிப்பதற்கான அழைப்பு தேடிவந்ததாம். ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் நடிகை.
Tags:    

Similar News