கிசுகிசு
கிசுகிசு

சம்பளத்தை உயர்த்திய நடிகை

Update: 2022-04-17 18:23 GMT
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி இருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறாராம். இந்நிலையில், இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று நடிகையை அணுகி இருக்கிறார்களாம்.

கதையை கேட்ட நடிகை, ரூ.4 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் இறுதியாக ரூ.3 கோடி கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்களாம். முந்தைய படங்களில் நடிகை ரூ.2 கோடிதான் வாங்கி வந்தாராம். 
Tags:    

Similar News