கிசுகிசு
கிசுகிசு

கட்டளை போட்ட நடிகை... கண்டுக்கொள்ளாத நடிகர்

Published On 2022-02-28 18:05 IST   |   Update On 2022-02-28 18:05:00 IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவருக்கு பிரபல நடிகை ஒருவர் கட்டளை போட்டிருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகப் பிரபலமான நடிகை, திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறாராம். இவர் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து தெறிக்க விட்டிருந்தாராம். தற்போது அந்த முன்னணி நடிகர் புதிய படத்தில் நடித்து வருகிறாராம்.

அவருக்கு ஜோடியாக இளம் நடிகையை படக்குழுவினர் நடிக்க வைத்திருக்கிறார்களாம். இதை அறிந்த நடிகை நடிகருக்கு போன் செய்து அந்த நடிகையுடன் நடிக்க வேண்டாம் என்று கூறினாராம். ஏனென்றால் இரண்டு நடிகைகளுக்கும் ஏற்கனவே சண்டை இருக்கிறதாம். இதனால்தான் நடிகருக்கு தடை போட்டாராம். ஆனால் நடிகரோ இதை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டாராம். 

Similar News