கிசுகிசு
கிசுகிசு

சர்ச்சை கதையில் நடிக்கும் நடிகை

Published On 2022-02-25 23:53 IST   |   Update On 2022-02-25 23:53:00 IST
பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், தற்போது சர்ச்சை கதையில் நடிக்க இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர், ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தாராம். அதன்பின் உடல் எடை கூடியதால், பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாராம். உடை எடையை குறைக்க பெரிய முயற்சி செய்தும் பெரியதாக பலன் அளிக்கவில்லையாம்.

திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், தனக்கேற்றவரை ரொம்ப நாட்களாக தேடியும் இன்னும் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில் மீண்டும் பட வாய்ப்பை பிடிக்க சர்ச்சையான ஒரு கதையை தேர்வு செய்து இருக்கிறாராம். நெகட்டிவ்வாக அமைந்தாலும், எல்லோரிடமும் தன்னை பற்றி பேசுவார்கள் என்று இப்படி திட்டம் போட்டு இருக்கிறாராம் நடிகை.

Similar News