சின்னத்திரை, பெரியத்திரை என்று கலக்கி வரும் பிரபல நடிகை ஒருவர், விளம்பரத்திற்கு அதிக பணம் கேட்டு இருக்கிறாராம்.
விளம்பரத்திற்கு அதிக பணம் கேட்ட நடிகை
பதிவு: ஜனவரி 12, 2022 23:51 IST
கிசுகிசு
தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடியில் போட்டோ எடுத்து பிரபலமான நடிகை, சமீபகாலமாக சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறாராம். இவர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி வரவேற்பு பெற்றதால் ஏராளமான ரசிகர்களை பெற்றாராம். மேலும் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று நல்ல பெயரையும் எடுத்தாராம்.
இந்நிலையில், நடிகையிடம் சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று ஒரு நிறுவனம் கேட்டார்களாம். இதற்கு நடிகை, ரூ.10 லட்சம் வேண்டும் என்று என்றாராம். இதை கேட்ட அந்த நிறுவனம் அதிர்ச்சியில் எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார்களாம்.