கிசுகிசு
கிசுகிசு

பட வாய்ப்பை பிடிக்க சம்பளத்தை குறைத்த நடிகை

Update: 2022-01-07 17:44 GMT
பிற மொழிகளில் பிசியாக நடித்து வந்த நடிகை, தமிழ் பட வாய்ப்புகளை பிடிக்க புது யுக்தியை கையாண்டு வருகிறாராம்.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை, நடுவில் காதல் பிரச்சனையால் வாய்ப்புகளை இழந்தாராம். அதன்பிறகு கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் இருந்த நடிகை, பிற மொழிகளில் பிசியாக நடித்து வந்தாராம். தற்போது தமிழ் பட வாய்ப்புகளை பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.

காமெடி நடிகருடன் நடிக்க நடிகையிடம் அணுகினார்களாம். நடிகையும் கதை கேட்டு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். திகைத்து போன படக்குழுவினர், நடிகையிடம் ஓரளவிற்கு சம்பளத்தை குறைத்து பேசினார்களாம். நடிகையும் வந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதற்காக உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
Tags:    

Similar News