கிசுகிசு
கிசுகிசு

ஆட சொன்ன இயக்குனர்... மறுப்பு தெரிவித்த நடிகை

Published On 2022-01-03 10:35 GMT   |   Update On 2022-01-03 10:35 GMT
தமிழ், மலையாளம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆட மறுத்து விட்டாராம்.
கதாநாயகிகள் பலரும் படவாய்ப்பு இல்லாத போது குத்தாட்ட பாடலுக்கு நடனமாடுவது வழக்கமாக வைத்து இருக்கிறார்களாம். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் பிரபல நடிகை ஆடிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதாம். நடிகைகள் ஆடும் குத்தாட்டதை விரும்பி பார்க்க தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறதாம். 

இயக்குனர்கள் பலரும் முன்னணி நடிகைகளை தொடர்பு கொண்டு ஒரு பாடலுக்கு எங்கள் படத்தில் குத்தாட்டம் வேண்டும் என்று கேட்கிறார்களாம். அப்படி நடன நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தற்போது தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவரிடம் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட அணுகி இருக்கிறார்களாம்.

அதற்கு நடிகை, எனக்கு நடனம் ஆட தெரியும் என்பதற்காக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட சொல்லி கேட்கிறார்கள். நான் நடிக்கும் படத்தில் கூட கதைக்கு தேவை இருந்தால் மட்டுமே பாடல் காட்சியில் நடனம் ஆடுவேன் என்று சொல்லி விட்டாராம்.
Tags:    

Similar News