கிசுகிசு
கிசுகிசு

ஆதரவுக்கு ஆள் தேடும் நடிகர்

Published On 2021-12-09 11:51 GMT   |   Update On 2021-12-09 11:51 GMT
இளம் நடிகர் ஒருவர் தனக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பேச ஆள் தேடி வருகிறாராம்.
சின்னத்திரையில் இருந்து தற்போது பெரியத்திரைக்கு வந்திருக்கும் இளம் நடிகர் ஒருவர், தன்னுடைய பட விழாவின் போது இயக்குனர்கள் பற்றி பேசியது சர்ச்சையானதாம். இயக்குனர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்களாம்.

இதனால், தன்னுடைய இமேஜை மாற்ற தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து, எனக்கு ஆதரவாக பேசுங்கள், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யுங்கள் என்று கேட்டு வருகிறார்களாம். ஆனால், நண்பர்களோ அவரைப் பற்றி தற்போது பேசினால், தனக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்களாம்.
Tags:    

Similar News