சினிமா செய்திகள்

ஆசிஃப் அலி நடித்த `சர்கீட்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

Published On 2025-04-25 16:08 IST   |   Update On 2025-04-25 16:08:00 IST
  • மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆசிஃப் அலி.
  • சர்கீட் படத்தில் தீபக் பரம்பொல் மற்றும் திவ்ய பிரபா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆசிஃப் அலி. இவர் சமீபத்தில் நடித்த கிஷ்கிந்த காண்டம், ரேகசித்திரம் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆசிஃப் அலி தற்பொழுது சர்கீத் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இவருடன் தீபக் பரம்பொல் மற்றும் திவ்ய பிரபா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகை திவ்ய பிரபா இதற்கு முன் நடித்த All We Imagine As Light சர்வதேச அள்வில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்கீத் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது அதில் தம்பதிகளாக இருக்கும் தீபக் பரம்பொல் மற்றும் திவ்ய பிரபா அவர்களுக்கு ஆரன் என ஹப்பர் ஆக்டிவ் மகன் இருக்கிறான்.. அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவனை பார்த்துக் கொள்ள ஆசிஃப் அலியை வேலைக்கு எடுக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் உள்ள நட்பு, பந்தம், சண்டைகள் என படத்தின் டிரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளது. திரைப்படம் வரும் மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Full View

Tags:    

Similar News