சினிமா செய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி மனதை உருக்கிய ஒரு படமாக அமைந்தது - Lyca தயாரிப்பாளர் தமிழ் குமரன்

Published On 2025-04-28 17:32 IST   |   Update On 2025-04-28 17:32:00 IST
  • டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
  • திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பற்றி பல பிரபல இயக்குநர்கள் பாராட்டி புகழ்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசினர். இந்நிலையில் படத்தை பார்த்த லைகா நிறுவனத்தின் தலைவரான தமிழ் குமரன் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்

"டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தை பார்த்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது; மனதையும் உருக்கிய ஒரு படமாக அமைந்தது. சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பு மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர். குறிப்பாக முள்ளி தாஸ் (கமலேஷ்) என்கிற கதாபாத்திரம் பாராட்டத்தக்க வகையில் இருந்தது.

முதல் திரைப்படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குநர் அபிஷன், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், இந்த அருமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

மில்லியன் டாலர்ஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள "டூரிஸ்ட் ஃபேமிலி" மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்! கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று கொண்டாட வேண்டிய படம் இது." என கூறியுள்ளார்.

Tags:    

Similar News