சினிமா செய்திகள்

Bad Girl படத்தின் 2வது சிங்கிள் "நான் தனி பிழை" வெளியானது

Published On 2025-07-17 20:44 IST   |   Update On 2025-07-17 20:44:00 IST
  • Bad Girl திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
  • ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது.

பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடலை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான `நான் தனி பிழை' வரும் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

அதன்படி, நான் தனி பிழை பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Full View
Tags:    

Similar News