சினிமா செய்திகள்

நடந்து முடிந்தவற்றை மறந்துவிடுங்கள்.. விஷாலின் அனுபவம்

Published On 2023-07-19 03:15 GMT   |   Update On 2023-07-19 03:15 GMT
  • நடிகர் விஷால் தற்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • இதையடுத்து விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஷால் தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இதைத்தொடர்ந்து விஷாலின் 34-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜன் இணைந்து பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர். மேலும், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


இந்நிலையில், நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் 'நடந்து முடிந்தவற்றை மறந்துவிடுங்கள். எதிர்காலத்தை நோக்கி பயணியுங்கள்' என்று மோட்டிவேஷன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை லைக் செய்து ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Tags:    

Similar News