சினிமா செய்திகள்

விமல்

கையில் துப்பாக்கியுடன் விமல்.. வைரலாகும் போஸ்டர்..

Update: 2022-06-28 08:48 GMT
  • இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் விமல் நடித்து வரும் படம் துடிக்கும் கரங்கள்.
  • இதில் விமலுக்கு ஜோடியாக மிஷா நரங் இணைந்துள்ளார்.

பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விமல், தன் எதார்த்தமான நடிப்பால் தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்க வைத்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விலங்கு வெப்தொடர் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து 'எங்க பாட்டன் சொத்து', 'மஞ்சள் குடை', 'குலசாமி' போன்ற திரைப்படங்களில் விமல் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'துடிக்கும் கரங்கள்'.

இந்த படத்தில் மிஷா நரங், சதீஷ் , சௌந்தர ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராகவ் பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ஒடியன் டாக்கீஸ் தயாரிக்கிறது.


'துடிக்கும் கரங்கள்' ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில், 'துடிக்கும் கரங்கள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விமல், கையில் துப்பாக்கியுடன் நிற்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப்பக்கதில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

Similar News