சினிமா செய்திகள்

வாத்தி

நம்ம 'வாத்தி' வரார்.. பிரம்மாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழா..

Published On 2023-02-02 12:00 GMT   |   Update On 2023-02-02 12:01 GMT
  • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‘வாத்தி’.
  • இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.


வாத்தி

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வாத்தி

அதன்படி, 'வாத்தி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக இசை வெளிட்யீட்டிற்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது இந்த அறிவிப்பால் உற்சாகத்தில் உள்ளனர்.


Tags:    

Similar News