சினிமா செய்திகள்

சந்தானம்

வடக்குப்பட்டி ராமசாமியாக சந்தானம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

Published On 2023-01-25 14:30 IST   |   Update On 2023-01-25 14:31:00 IST
  • நடிகர் சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார்.
  • இவர் தற்போது 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் 'கிக்'. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார். இப்படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


வடக்குப்பட்டி ராமசாமி போஸ்டர்

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் வி.ஸ்ரீ நட்ராஜ் கூறும்போது, "நடிகர் சந்தானம் எந்தவொரு ஜானர் கதைக்கும் பொருந்திப் போகக் கூடியவர். அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருந்தோம். அப்போது தற்செயலாக நாங்கள் 'டிக்கிலோனா' படம் பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் யோகியை சந்தித்தபோது அவர் ஒரு அற்புதமான கதையை எங்களுக்கு சொன்னார். 'வடக்குப்பட்டி ராமசாமி' பன்முக நடிகர் கவுண்டமணி சாரின் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று. இப்போதுள்ள தலைமுறை இளைஞர்களிடம் அனைத்து சமூகவலைதளங்களிலும் இந்த கதாபாத்திரம் மீம் மெட்டிரியலாக உள்ளது.


வடக்குப்பட்டி ராமசாமி படக்குழு

கார்த்திக் கதையை சொல்லி முடித்தபோது, அது படத்தின் சாராம்சம் மற்றும் கதாநாயகனின் குணாதிசயத்துடன் நன்றாக பொருந்திப் போயிருப்பதை உணர்ந்தோம். பல விஷயங்களில் 'நம்பிக்கை Vs நம்பிக்கையற்றது' என்பதைக் கொண்டு தமிழ்நாடு இருந்து வருகிறது. ராமசாமி என்ற பெயரே மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசும் ஒரு சின்னமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நடிகர் கவுண்டமணி சாரின் மிகப்பெரிய ரசிகர். மேலும் அவரது முந்தைய படமான 'டிக்கிலோனா' கூட கவுண்டமணி சாரின் பல நகைச்சுவை வரிகளால் ஈர்க்கப்பட்டு உருவானதுதான். 'வடக்குப்பட்டி ராமசாமி' ஒரு பீரியட் காமெடி-ட்ராமா படமாக அமைந்து அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடித்த ஒன்றாக அமையும் என உறுதியாக நம்புகிறோம்" என்றார்.

Tags:    

Similar News