சினிமா செய்திகள்

பிரபல பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம்.. குவியும் வாழ்த்துக்கள்

Published On 2023-04-17 13:59 IST   |   Update On 2023-04-17 13:59:00 IST
  • தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரபல பாடகராக வலம் வருபவர் மனோ.
  • பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரபல பாடகராக வலம் வருபவர் மனோ. இவர் பாடகராக மட்டுமில்லாமல் நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் குரலில் வெளியான ஷெண்பகமே ஷெண்பகமே, நீ ஒரு காதல் சங்கீதம், ராசாத்தி மனசுல, நூறு வருஷம், ஒரு மைனா மைனா குருவி என பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாக இருந்து வருகிறது. மேலும் சிங்கார வேலன், எனக்கு 20 உனக்கு 18, சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட பல படங்களில் நடிகராக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.


டாக்டர் பட்டம் பெற்ற பாடகர் மனோ

இந்நிலையில் பின்னணி பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது. பாடகர் மனோ, 38 ஆண்டுகளில் 15 மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இதற்காக, மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, மனோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News