சினிமா செய்திகள்

கோவை சரளா

கோவை சரளா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Update: 2022-11-26 06:00 GMT
  • பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செம்பி’.
  • இப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கும் படம் 'செம்பி'. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர்.


செம்பி

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'செம்பி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


செம்பி போஸ்டர்

அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.Tags:    

Similar News