சினிமா செய்திகள்

சமந்தா

பேயாக அறிமுகமாகும் சமந்தா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Published On 2022-09-08 18:09 IST   |   Update On 2022-09-08 18:09:00 IST
  • தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா.
  • இவருக்கு தொடர்ந்து பல படங்கள் வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் 'யசோதா' என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


சமந்தா

மேலும், இவர் நடிகர் வருண் தவானுடன் இந்தியில் வெப்தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இதை 'தி ஃபேமிலிமேன்'தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். இதைத்தொடர்ந்து, இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் சமந்தா இந்தியில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் இவர் இளவரசியாகவும் பேயாகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பயிற்சியிலும் சமந்தா கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News