சினிமா செய்திகள்
ரஜினிகாந்த்
மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?
- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதர்வா - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இந்நிலையில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக அதர்வா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.