சினிமா செய்திகள்
null

தூய்மையான காற்றை 'இந்தியா' சுவாசிக்கும்- பி.சி.ஸ்ரீராம் பதிவு

Published On 2023-09-06 10:43 IST   |   Update On 2023-09-06 11:14:00 IST
  • திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம்.
  • சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.


மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் "நாம் இந்தியாவை காக்க பிறந்தவர்கள். தூய்மையான காற்றை 'இந்தியா' சுவாசிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.


குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பெயர் மாற்றத்திற்கு பிரபலங்கள் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.




Tags:    

Similar News