சினிமா செய்திகள்

பகாசூரன்

null

களம் கண்டு ஆடுவான் - பகாசூரன் படத்தின் புதிய போஸ்டர்

Published On 2022-08-27 12:00 IST   |   Update On 2022-08-27 12:07:00 IST

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

    பகாசூரன் 

     

    இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று 'பகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு, இப்படத்தின் டீசர் வருகிற 28-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளது.

    பகாசூரன் 

     

    இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை மோகன் ஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, "களம் கண்டு ஆடுவான்" என பதிவிட்டுள்ளார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நட்டியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    Tags:    

    Similar News