சினிமா செய்திகள்

கார்த்தி

விக்ரம் பிரபு படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி

Update: 2022-06-27 07:09 GMT
  • அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.
  • இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. டாணாக்காரனின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'.

இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


வாணி போஜன் - விக்ரம் பிரபு

சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கார்த்தி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முழுவதும் ஆக்‌ஷன் காட்சியாக அமைந்துள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


Full View


Tags:    

Similar News