சினிமா செய்திகள்

ஒரே நாள், வெவ்வேறு தளங்களில் டீசர், டிரைலரை வெளியிட்ட 'ஒரு நொடி' படக்குழு

Published On 2024-04-12 18:18 GMT   |   Update On 2024-04-12 18:18 GMT
  • தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
  • கலை இயக்குநர் பணியை எஸ்.ஜே. ராம் கவனிக்கிறார்.

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் 'ஒரு நொடி' படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா வெளியிட்டார். அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் டிரைலர் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் 'ஒரு நொடி' படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் நடித்துள்ளனர்.

 


இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி.ரத்தீஷ் மேற்கொள்ள, கலை இயக்குநர் பணியை எஸ்.ஜே. ராம் கவனிக்கிறார்.

ஒரு நொடி படத்தின் கதை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News