சினிமா செய்திகள்

'ரெபல்' தமிழ் பற்றி பேசும் கதை - ஜி.வி. பிரகாஷ்

Published On 2024-03-12 11:06 GMT   |   Update On 2024-03-12 11:06 GMT
  • இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது.
  • நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார்.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெபல். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 22ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

சமீபத்தில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஜி.வி. பிரகாஷ் ரெபல் படம் பற்றி பேசியுள்ளார்.

 


இது குறித்து அவர் பேசும் போது, "ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ரெபல் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது."

"தமிழ் பற்றிப் பேசும் கதை, இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார். மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலை செய்துள்ளார்."

"நீண்ட காலம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன். அவர் தான் டார்லிங் படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமையும்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News