சினிமா செய்திகள்

காளி

வாயில் சிகரெட்டுடன் காளி.. ஆவணப்பட போஸ்டரால் வெடித்த சர்ச்சை

Published On 2022-07-04 04:31 GMT   |   Update On 2022-07-04 04:31 GMT
  • லீனா மணிமேகலையின் ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
  • பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து கவிதைகளை எழுதியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. இவரின் பறை, தேவதைகள், பலிபீடம் போன்ற பல ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றது. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.

காளி - லீனா மணிமேகலை

இந்நிலையில், லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் புதிய சர்சையை கிளப்பியுள்ளது. காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News