சினிமா செய்திகள்

நயன்தாராவை முதன் முதலா மீட் பண்ண இடம் - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

Published On 2022-06-11 18:17 IST   |   Update On 2022-06-11 18:17:00 IST
  • விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடந்தது.
  • சென்னை தாஜ் க்ளப் ஹவுஸ் ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பு

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 



இந்நிலையில், சென்னை தாஜ் க்ளப் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன் கூறுகையில், 'நானும் ரவுடி தான் படத்தின் கதையை செல்வதற்காக நயன்தாராவை நான் முதன் முதலாக இந்த ஹோட்டல்ல தான் சந்தித்தேன்' என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

Tags:    

Similar News