சினிமா செய்திகள்

நாக சைதன்யா

null

இந்தி மொழியால் பட வாய்ப்புகளை இழந்தேன்- நாக சைத்தன்யா பேச்சால் சர்ச்சை

Published On 2022-08-03 10:04 GMT   |   Update On 2022-08-03 11:37 GMT
  • இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ள படம் லால் சிங் சத்தா.
  • இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

 

லால் சிங் சத்தா

லால் சிங் சத்தா படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ராணுவ அதிகாரி பாலராஜு வேடத்தில் நாக சைதன்யா நடித்திருக்கிறார். இதுவரை இந்தி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நாக சைதன்யா இந்தப்படத்தில் நடித்ததற்கான காரணம் பற்றி கூறியதாவது, நான் சென்னையில் வளர்ந்து ஐதராபாத்தில் குடியேறினேன். எனவே, எனது இந்தி சிறந்ததாக இல்லை. நான் நீண்ட காலமாக அதைப் பற்றி ஒருவித பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறேன். அதனால்தான் சில சமயங்களில் இந்தி படங்களில் வாய்ப்பு வந்தவுடன் விலகிவிட்டேன்.

 

நாக சைதன்யா

உண்மையில், நான் 'தென்னிந்தியன்' என்று அவர்களிடம் சொன்னபோது, ​​மக்கள் இருமுறை யோசித்திருக்கிறார்கள். லால் சிங் சத்தா படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் வடக்கே செல்லும் தென்னிந்தியப் பையனாக நான் நடிக்கிறேன், எங்கள் பயணம் அங்கிருந்துதான் தொடங்குகிறது. நான் பேசும் விதத்தில் தென்னிந்தியா சாயல் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

நான் படத்தில் இந்தி பேசுகிறேன், ஆனால் நான் ஒரு தெலுங்கு வார்த்தையை பேசுவது போல இந்தியை பயன்படுத்தினேன். ஒரு தெலுங்கு சுவையை கொண்டு வருவதற்காக சில வார்த்தைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக இணைத்துள்ளோம் என்றார்.

Tags:    

Similar News