சினிமா செய்திகள்

லால் சிங் சத்தா

null

அமீர்கான் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் கைது... போலீஸ் அதிரடி

Update: 2022-08-18 08:45 GMT
  • அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா.
  • இந்த படம் திருட்டுத்தனமாக வெளியிடுவது குறித்த புகாரின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' திரைப்படம் உருவாகியது. இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


லால் சிங் சத்தா

நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து இந்த படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளிவருவது குறித்து பெங்களூரில் உள்ள பனஸ்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் போலீஸார் சிலரை கடந்த 12–ந்தேதி கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் போது இந்த படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


லால் சிங் சத்தா

மேலும், இதுபோன்ற திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக ஒரு குழு அமைத்து அவர்கள் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News