சினிமா செய்திகள்

சந்தானம்

பாடகரான நடிகர் சந்தானம்.. ட்ரெண்டாகும் டீசர்..

Update: 2022-10-06 08:19 GMT
  • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கிக்’.
  • இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


கிக்

ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


கிக்

இதையடுத்து இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிக்' திரைப்படத்தின் முதல் பாடலான 'சாட்டர்டே இஸ் கம்மிங்கு' வரும் அக்டோபர் 10-ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை படக்குழு டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த பாடலை நடிகர் சந்தானம் பாடியுள்ளார். இதன் மூலம் சந்தானம் பாடகராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Full View


Tags:    

Similar News