சினிமா செய்திகள்

கே.ஜி.எப்

null

கே.ஜி.எப். 3-ல் நடிக்க விரும்பும் பாலிவுட் நடிகைகள்.. குழப்பத்தில் படக்குழு

Published On 2022-06-23 13:00 IST   |   Update On 2022-06-23 13:04:00 IST
  • கே.ஜி.எப் படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் யஷ்.
  • ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'கே.ஜி.எப்-2' படம் சமீபத்தில் வெளியானது.

கே.ஜி.எப் படத்தின் 3ம் பாகம் எழுதும் பணியில் இயக்குனர் பிரசாந்த் நீல் தீவிரமாக இருந்து வருகிறார். இரண்டாம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கடத்தப்பட்ட தங்கத்தை கப்பலில் கொண்டு செல்வதுபோல் அடுத்த பாகத்திற்கான முன்னோட்டக் காட்சியை காட்டியிருப்பார்கள். இதனால் 3ம் பாகம் முழுவதும் கடலில்தான் கதை நடப்பதாக காட்டப்போகிறார் என்பதுபோல் சொல்லியிருப்பார். கடலில் நடக்கும் சாகச கதை இன்னும் மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள்.

கே.ஜி.எப்


இந்த நிலையில் நாயகன் யஷிற்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளுக்குள் போட்டியே நடக்கிறதாம். இதனால் தயாரிப்பு தரப்பான கொம்பேலா கம்பெனிக்கு தங்கள் சார்பாக தூதுவர்களை அனுப்பி வருவதாகவும். படத்தில் ஹீரோயினாகவோ அல்லது முக்கிய கதாபாத்திரங்களிலோ நடிக்க வேண்டும் என்பதில் முன்னணி கதாநாயகிகள் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கே.ஜி.எப்

இன்னும் சிலர் இயக்குனர் பிரசாந்த் நீலை தொடர்பு கொண்டு தங்களுக்கும் கதாபாத்திரங்களை எழுதச் சொல்லி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் படக்குழு யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்கின்றனர்.

Tags:    

Similar News