சினிமா செய்திகள்

ஷில்பா ஷெட்டி

சத்யவதியாக மாறிய ஷில்பா ஷெட்டி.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்

Published On 2023-03-22 18:11 IST   |   Update On 2023-03-22 18:11:00 IST
  • பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'.
  • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


கேடி தி டெவில்

1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் ஏற்படுத்தியுள்ளது.


கேடி தி டெவில் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா, சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா கூறியதாவது, "ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் 'கேடி தி டெவில்'. ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு 'சத்யவதி' தேவை.  இந்த 'கேடி' போர்க்களத்தில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாப்பாத்திரத்தில் சத்தியவதியாக நடிப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி" என்று கூறினார்.

Tags:    

Similar News