சினிமா செய்திகள்

எமிஜாக்சன்

4-வது முறையாக காதல்.. புதிய காதலருடன் வலம் வரும் எமிஜாக்சன்

Published On 2022-06-08 13:24 IST   |   Update On 2022-06-08 13:24:00 IST
  • தமிழில் மதராசபட்டினம் படத்தில் மூலம் அறிமுகமானவர் எமிஜாக்சன்.
  • எமிஜாக்சன் புது காதலர் எட் வெஸ்ட்விக்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது

தமிழில் மதராசபட்டினம் படத்தில் அறிமுகமான எமிஜாக்சன், ரஜினியுடன் 2.0, விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம், ஐ, தனுசின் தங்கமகன், உதயநிதியின் கெத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 6 வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை காதலித்து பிரிந்தார். பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்குடன் மலர்ந்த காதலையும் முறித்தார்.


எமிஜாக்சன்

தொடர்ந்து லண்டன் ஓட்டல் அதிபர் ஜார்ஜை காதலித்து திருமணத்தை நிச்சயம் செய்த நிலையில் கர்ப்பமாகி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். பிறகு ஜார்ஜை விட்டும் பிரிந்தார். 4-வதாக சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் எமி ஜாக்சனுக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவியது. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. இந்த நிலையில் முதல் முறையாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் எட் வெஸ்ட்விக்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை எமிஜாக்சன் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் இருவரும் காதலிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

Tags:    

Similar News