சினிமா செய்திகள்

தனுஷ்

null

இரு மொழியில் பாடி அசத்தும் தனுஷ்.. இந்த பாடலை இவர்தான் பாடினாரா..?

Published On 2022-11-08 16:12 IST   |   Update On 2022-11-08 16:30:00 IST
  • தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'.
  • இந்த படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.


வாத்தி

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் முதல் பாடல் 'வா வாத்தி' வருகிற நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.


வாத்தி

இந்நிலையில், 'வாத்தி' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த வீடியோவை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'நவம்பர் 10-ஆம் தேதி வாத்தி படத்தின் முதல் பாடல் வெளியாக போகிறது. இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். இதிலிருந்து ஒரு அன்பிளாண்ட் வீடியோ' என்று தனுஷ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முதல் பாடலை பாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் பாடலுக்காக காத்திருக்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


வாத்தி

'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News