சினிமா செய்திகள்

இது Fan Made-னு நினைக்குறேன்.. இருந்தாலும்..! கமல் குறித்து டான்ஸ் மாஸ்டர் ஷோபி பதிவு

Published On 2023-06-27 10:21 IST   |   Update On 2023-06-27 10:21:00 IST
  • டான், பிரின்ஸ், சர்தார், வாரிசு, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ஷோபி.
  • இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் ஈர்த்து வருகிறது.

கமலின் வசூல்ராஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடன இயக்குனராக அறிமுகமானவர் டான்ஸ் மாஸ்டர் ஷோபி. அதன்பின்னர் திருப்பாச்சி, சச்சின், ஆறு, குருவி, வில்லன், சிங்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியான டான், பிரின்ஸ், சர்தார், வாரிசு, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார்.



இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் ஷோபியின் பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதன்படி புராஜெக்ட் கே படத்தில் நடிக்கவுள்ள பிரபாஸ் மற்றும் கமல்ஹாசனின் புகைப்படங்களை ரசிகர் ஒருவர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்று எடிட் செய்திருக்கிறார். இதனை பகிர்ந்த ஷோபி, இது Fan Made-னு நினைக்குறேன்.. இருந்தாலும்..! தீயாய் இருக்கிறது என்று குறிப்பிடும் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



Tags:    

Similar News