சினிமா செய்திகள்

பிரஜின்

null

ஒரேநாளில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள 'டி 3'

Update: 2022-06-27 05:34 GMT
  • அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'டி 3'.
  • 'டி 3' படத்தில் பிரஜினிக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'டி 3', இந்த படத்தில் பிரஜினுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் இணைந்துள்ளார். இதில் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பீமாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாமுவேல் காட்சன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


படக்குழு

ஒரே நாளில் நடக்கும் கதைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தின் டைட்டில் லுக்கை சமீபத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.

இப்படம் குறித்து படத்தின் இயக்குநர் பாலாஜி கூறும்போது, "நான் கேள்விப்பட்ட ஒரு உண்மை சம்பவம் பற்றி, அதேசமயம் இதுவரை வெளிவராத சம்பவம் பற்றி இந்த கதையை உருவாக்கியுள்ளேன். அதனால் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக நகரும்.

சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு ஒருநாள் வாடகையாக மட்டுமே ரெண்டரை லட்சம் ரூபாய் செலுத்தி படப்பிடிப்பு நடத்த தயார் நிலையில் இருந்தோம். ஆனால் அன்றைய தினம் காலை படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்திறங்கிய நடிகர் வர்கீஸ் மேத்யூவுக்கு விமான நிலையத்திலேயே கோவிட் பாசிடிவ் என ரிசல்ட் வர, படப்பிடிப்பு கேன்சல் ஆனது. இப்படி நிறைய அனுபவங்களை கடந்து இந்தப்படம் உருவாகியுள்ளது" என்று கூறியுள்ளார். .

Tags:    

Similar News