சினிமா செய்திகள்

அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்.. இதுதான் காரணம்

Published On 2023-12-30 06:59 GMT   |   Update On 2023-12-30 06:59 GMT
  • இயக்குனர் ராம்கோபால் வர்மா புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
  • இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸாக இருந்தது.

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து 'வியூகம்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்துள்ளார்.


இந்த படத்தில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியான சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோரின் கதாபாத்திரங்களும் இடம்பெற்று உள்ளன. இவர்கள் இருவரையும் இழிவுபடுத்தும் விதமாக சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் 'வியூகம்' படத்தின் போஸ்டர்களை தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமல்லாமல், பிலிம் நகரில் உள்ள ராம்கோபால் வர்மாவின் அலுவலகத்தில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர்.

இந்த நிலையில் வியூகம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி - 11 ம் தேதி வரை 'வியூகம்' படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News