சினிமா செய்திகள்

பம்பாய் சகோதரிகள்

பம்பாய் சகோதரிகளில் ஒருவரான லலிதா மறைவு.. திரையுலகினர் இரங்கல்

Published On 2023-02-01 12:15 IST   |   Update On 2023-02-01 12:15:00 IST
  • பம்பாய் சகோதரிகளில் ஒருவரான லலிதா (வயது 84) உடல்நலக் குறைவால் காலமானார்.
  • இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த சகோதரிகள் சி.சரோஜா மற்றும் சி.லலிதா. இவர்கள் சிறு வயதிலேயே மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில், பிரபல கர்நாடக இசை கலைஞரும், பாடகர் ஹரிஹரனின் தந்தையுமான ஹெச்.ஏ.எஸ். மணியிடம் கர்நாடக இசை பயின்றனர். இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர்களை பம்பாய் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 50 ஆண்டுகளாக பல மொழிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இவர்களின் இசைப் பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர்.


பம்பாய் சகோதரி - லலிதா


இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த லலிதா, செவ்வாய்க்கிழமை (நேற்று) காலமானார். சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் இவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான என்.ஆர்.சந்திரன் இவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News