சினிமா செய்திகள்

அது மட்டும் பண்ணாதீங்க.. எல்லாரும் காயப்படுறாங்க.. நடிகை உருக்கம்

Published On 2023-08-04 17:07 IST   |   Update On 2023-08-04 17:07:00 IST
  • பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியா.
  • இவரது கணவர் அரவிந்த் சேகர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி ஷண்முகப்பிரியா தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார். இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


ஸ்ருதி ஷண்முகப்பிரியா கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒருவருடமே ஆன நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 30 வயதான அரவிந்த் சேகரின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதைத்தொடர்ந்து அரவிந்த் சேகரின் மரணம் குறித்து பல வதந்திகள் பரவி வந்த நிலையில் இதற்கு விளக்கமளித்து நடிகை ஸ்ருதி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அரவிந்த்தோட இறப்பு செய்தி கேட்டு, நேரிலும் போனிலும் பலபேர் ஆறுதல் சொல்லியிருந்தீர்கள். எங்களுக்கு நிறைய பலம் கொடுத்தீர்கள் அதுக்கு ரொம்ப நன்றி. இதுமாதிரி கஷ்டமான நேரத்திலும் வீட்டுல் உள்ள எல்லா சடங்குகளை விட்டுவிட்டு இப்படி ஒரு வீடியோ ரெக்கார்டு பண்ணி போடுவதற்கு முக்கிய காரணம் உள்ளது.

நிறைய யூடியூப் சேனல்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தேவையில்லாத தகவல்களை அதிகமா பரப்பி வருகிறார்கள். தெரியாமல் நீங்கள் போடும் விஷயங்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் காயப்படுகிறார்கள். அது மட்டும் பண்ணாதீர்கள். எல்லா யூடியூப் சேனல்களிடமும் இதை நான் கேட்டுக்கொள்கிறேன்.


என் கணவர் மாரடைப்பினால் இறந்துவிட்டார். அதைத் தாண்டி நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். அவர் ஒரு பாடிபில்டர், டிரெய்னர், ஜிம்ல ஒர்க்அவுட் செய்யும் போது இறந்துவிட்டார், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவர் சிவில் இன்ஜினியர். பிட்னஸ் மேல் அவருக்கு ஆர்வம் அவ்வளவுதான்! இதற்கிடையில் எந்த வதந்தியையும் பரப்ப வேண்டாம்" என உருக்கமாக பேசியுள்ளார்.


Tags:    

Similar News