சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி

புத்தகமாகும் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு

Update: 2023-02-08 12:15 GMT
  • சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.
  • இவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி 1967-ல் கந்தன் கருணை என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.


ஸ்ரீதேவி

பின்னர் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.


ஸ்ரீதேவி

கடந்த 2018-ல் ஸ்ரீதேவி துபாய் சென்றபோது பாத்ரூம் தொட்டிக்குள் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்கை வரலாறு தற்போது புத்தகமாக வெளியாகவுள்ளது.


போனிகபூர் பதிவு

இந்த புத்தகம் 'ஸ்ரீதேவி- தி லைப் ஆப் எ லெஜண்ட்' (sri devi - The life of a legend) என்ற பெயரில் வரவிருக்கிறது. இந்தப்புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியிருக்கிறார் என அவரது கணவரும், தயாரிப்பாருமான போனிகபூர் தனு சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும் இந்த புத்தகம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News