சினிமா செய்திகள்

சஞ்சிதா

பெண்களுக்கு பாதுகாப்பும் மரியாதையும் கொடுப்பது மிக அவசியம் - நடிகை சஞ்சிதா

Published On 2022-09-05 15:57 IST   |   Update On 2022-09-05 15:57:00 IST
  • இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ஷூ.
  • இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சஞ்சிதா பெண்கள் குறித்து பேசியுள்ளார்.

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ஷூ. இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, கேபி பாலா, திலீபன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை நெட்கோ ஸ்டுடியோஸ் மற்றும் ஏடிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் டி.மதுராஜ் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஷூ

 

திரில்லர் காமெடி பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் நடிகை சஞ்சிதா ஷெட்டி கூறியதாவது, படத்தின் தலைப்பு ஷூ என்று இருந்தாலும், இந்த படத்தின் கரு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கபட்ட இந்த கதை இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், மரியாதை கொடுப்பதும் மிக அவசியமான ஒன்று. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்றார்.

சஞ்சிதா

 

நடிகை கோமல் ஷர்மா கூறியதாவது, இது போன்ற கதைக்களத்தை உருவாக்கி அதை திரைப்படமாக மாற்றுவது மிகவும் சவாலான விஷயம். இப்படம் உருவாக தயாரிப்பாளர் தான் காரணம். சமூக கருத்துகள் கொண்ட இந்த திரைப்படத்தை எடுத்ததற்கு கல்யாண் அவர்களுக்கு நன்றி. இப்போதைய சமூகத்திற்கு தேவையான கருத்துகளை கொண்ட திரைப்படமாக இது உருவாகி இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

Tags:    

Similar News