சுஷ்மிதா சென்
'ஆண்களால் நான் ஏமாற்றப்பட்டேன்' - சுஷ்மிதா சென்
- ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுஷ்மிதா சென்.
- இப்படத்தின் பிறகு அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட் சென்றார்.
நடிகை சுஷ்மிதா சென் 1997-ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.
சுஷ்மிதா சென்
2000-ஆம் ஆண்டில் ரேனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019-ல் அலிசா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். இவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை மட்டும் தத்தெடுத்து வளர்த்து வந்தார். திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பதற்கு சுஷ்மிதா சென் கூறியதாவது:- "அதிர்ஷ்டவசமாக சில சுவாரசியமான ஆண்களை நான் சந்தித்து உள்ளேன். அதுமட்டுமல்லாமல் அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்து விட்டேன். ஆகையால் தான் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் மூன்று முறை எனக்கு திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. ஆனால் கடவுள் என்னை காப்பாற்றி விட்டார். அதேபோல அந்த கடவுள் தான் இந்த இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார்" என்று கூறியுள்ளார்.