சினிமா செய்திகள்

மம்முட்டி - பாத்திமா இஸ்மாயில்

நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா காலமானார்.. திரையுலகினர் இரங்கல்

Published On 2023-04-21 10:05 IST   |   Update On 2023-04-21 10:05:00 IST
  • மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி.
  • இவருடைய தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று காலை காலமானார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, தமிழில் அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


மம்முட்டி - பாத்திமா இஸ்மாயில்

நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 93 வயதாகும் பாத்திமா இஸ்மாயில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News