சினிமா செய்திகள்

பட்ஜெட் சின்னது.. படம் பெருசு.. நடிகர் கிஷன் நெகிழ்ச்சி

Published On 2023-07-18 14:33 IST   |   Update On 2023-07-18 14:33:00 IST
  • விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’சிங்க்’.
  • இப்படத்தில் கிஷன், மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'சிங்க்'. இப்படத்தில் கிஷன், மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.



'சிங்க்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் கிஷன் பேசியதாவது, "என்னுடைய முதல் படமான 'முதல் நீ முடிவும் நீ' படத்திற்கு ஆதரவு கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. 'சிங்க்' படத்திற்காக இயக்குனர் விகாஸ் கடுமையாக உழைத்துள்ளார். இந்த படமும் பட்ஜெட்டும் சின்னதாக இருக்கலாம். ஆனால், நிறைய கனவுகளோடு இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அந்த வகையில் இது பெரிய படம்தான்.



படக்குழுவில் உள்ள அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் படம் எடுத்து முடித்ததும், 'ஓடிடியில் தான் ரிலீஸ் செய்ய உள்ளோம், பார்த்து விட்டு சொல்லுங்கள்' என்று ட்வீட் ஒன்று போட்டேன். டிவீட் போட்ட ஐந்து மணி நேரத்திற்குள்ளேயே நித்திஷ் எங்களை தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்தினார். சுரேஷ் சந்திரா அப்பாவுடன் ஒரு புராஜெக்ட்டில் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது. உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்றார்.

Tags:    

Similar News