சினிமா செய்திகள்

பாலா

கொச்சியில் தீவிர சிகிச்சை எடுக்கும் நடிகர் பாலா..?

Published On 2023-03-08 09:53 GMT   |   Update On 2023-03-08 09:53 GMT
  • 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா.
  • இவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


பாலா

இதையடுத்து நடிகர் பாலாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கல்லீரலில் பிரச்சினை இருப்பதாகவும் இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாலாவின் தாய் மற்றும் மனைவி எலிசபெத் அவரை உடனிருந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News