சினிமா செய்திகள்

திவ்யா- அர்னவ்

null

சின்னத்திரை நடிகை வழக்கு: இன்று ஆஜராவாரா நடிகர் அர்னவ் ?

Published On 2022-10-14 04:21 GMT   |   Update On 2022-10-14 05:11 GMT
  • சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
  • தற்போது கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.

சின்னத்திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

திவ்யா- அர்னவ்

 

இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

திவ்யா- அர்னவ்

 

இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் அர்னவை போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். எனவே இன்று (வெள்ளிக்கிழமை) போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

திவ்யா- அர்னவ்

 

இந்நிலையில் நடிகர் அர்னவ், தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் விசாரணைக்கு ஆஜராகும் அர்னவ் மீது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவரை போலீசார் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

திவ்யா- அர்னவ்

 

இதனால் அர்னவ் முன்ஜாமீன் கோரி கோர்ட்டை நாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இன்றைய தினம் அர்னவ் போலீஸ் விசாரணைக்கு ஆஜராவாரா? என்பது சந்தேகமாக இருப்பதாகவும் தெரிகிறது. ஒருவேளை அவர் விசாரணைக்கு ஆஜரானால் அவரிடம் விசாரித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News