சினிமா செய்திகள்

அமிதாப் பச்சன்

null

உங்களது பிரார்த்தனை மூலம் குணமடைந்து வருகிறேன் - நடிகர் அமிதாப் பச்சன்

Published On 2023-03-07 20:45 IST   |   Update On 2023-03-07 20:45:00 IST
  • நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமீபத்தில் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது.
  • இவர் தற்போது வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன் தற்போது புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதற்காக ஹைதராபாத் நகரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தசை பகுதியும் பாதிப்படைந்து உள்ளது.


அமிதாப் பச்சன்

இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஹைதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்த பின்னர் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினர். இதனை தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த விவரங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, "மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுகிறது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம். வலிக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன். ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தார். இவர் நலமடைய வேண்டும் என ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


அமிதாப் பச்சன்

இந்நிலையில், தற்போது அமிதாப் பச்சன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களின் அக்கறைக்கும், அன்பிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது பிரார்த்தனை மூலம் நான் குணமடைந்து வருகிறேன். அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


Tags:    

Similar News